அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2021 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் சம்மேளன கூட்டம்

சமூர்த்தியினால் சுபிட்சம் அடைந்த தேசத்தையும் செழிப்பான நாளையும் உருவாக்க ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கலுக்கான 2021 ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்க சம்மேளனம் கூட்டம் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது 

 குறித்த சம்மேளன கூட்டத்தில் பிரதம அதிதியாக தேசிய தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பொது ஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத் அவர்கள் கலந்துகொண்டு விசேட உரையாற்றியதுடன் மன்னார் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கலால் கௌரவிக்கப்பட்டார் குறித்த சம்பளமே கூட்டத்தில் மாவட்ட ரீதியில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை மற்றும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது 

 இக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி திணைக்களம், பிரதேச செயலகம், வங்கி சங்கம், மகாசங்கம், தலைமை காரியாலயம் ,மற்றும் வெளிக்கள பிரிவுகளில் கடமையாற்றும் அதிகமான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்









மன்னாரில் 2021 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் சம்மேளன கூட்டம் Reviewed by Author on March 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.