மனைவியை கொன்று; தீமூட்டி தற்கொலை செய்த கணவன்
அங்குருமுல்ல – வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரும், 68 வயதுடைய அவரது கணவனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
தம்பதியினரான இவர்கள் நீண்ட நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கு எதிராக கம்பளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையொன்றும் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே குறித்த நபர் அவரது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து பின்னர் சடலத்தினை தீயிட்டு எதிர்துள்ளதுடன், தானும் அதே தீயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மனைவியை கொன்று; தீமூட்டி தற்கொலை செய்த கணவன்
Reviewed by Author
on
March 25, 2021
Rating:

No comments:
Post a Comment