இத்தாலியின் எரிமலை சாம்பலுக்குள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர்!
இதே இடத்தில் 2018 ம் ஆண்டு மூன்று பண்டைய குதிரைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தேர் திருவிழா காலங்களில் அல்லது அணிவகுப்புக்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வின் நிபுணர்கள் நம்புகின்றார்கள்.
கி. பி 79 ல் VESUVIUS மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டதாகவும் அந்த எரிமலை குழம்பில் POMPEII நகரம் முற்றிலுமாக மூழ்கிப்போயிருந்தது.
அந்த எரிமலை சாம்பலில் படிவத்தினால் அங்கு வாழ்ந்த மனிதர்கள் மற்றும் கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆண்டான்-அடிமை உடல்களில் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தேரின் அமைப்பை பார்ப்போமானால் இரும்புக்கூறுகள், பித்தளை மற்றும் உலோக வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும், PLASTER MOLDING முறை மூலம் பாதுகாப்பாக வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு பண்டைய உலகம் எப்படி இருந்தது என புரிந்துகொள்ள இந்த முன்னேற்றம் உதவும் என இத்தளத்தின் இயக்குனர் MASSIMO OSANA கூறியுள்ளார்.
இந்த தேர் பெண் பூசாரிகள் அல்லது பெண்கள் ஓட்டுனர்களாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது.
AZTEC பேரரசின் பழங்கால மண்டையோட்டு கோபுரமும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள சுவாரசியம் என்னவென்றால் பழங்கால ஈழத்தமிழர்களின் நாக வழிபாடு அந்த தேரின் அழகிய வேலைப்பாடுகளாக உள்ளதை கண்டறிந்துள்ளார்கள். தமிழின் செம்மொழித்தன்மைக்கு இதுவும் சான்றாக அமையக்கூடும் என எண்ணத்தோன்றுகின்றது.
இந்த தளம் உலக பாரம்பரிய தளமாக UNESCO அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓர் சுற்றுலா தளமாகவும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த ஒரு இடமாகவும் காணப்படுகின்றது.
இத்தாலியின் எரிமலை சாம்பலுக்குள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர்!
Reviewed by Author
on
March 23, 2021
Rating:

No comments:
Post a Comment