அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை படகில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள்; இந்திய கடலோர காவல் படை பறிமுதல்

ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்களை இலங்கை படகில் இருந்து இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது. இந்தியாவின் மேற்கு கடலோர பகுதியில் அரபி கடலில் இந்திய கடலோர காவல் படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், வெளிநாட்டினர் தங்களது படகுகளில் போதை பொருட்களை கடத்துகின்றனர் என உளவு தகவல் இந்திய கடலோர காவல் படைக்கு கிடைத்தது. இதுபற்றி இந்திய கடலோர காவல் படையின் டி.ஜி. நடராஜன் கூறும்பொழுது, மினிகாய் தீவை ஒட்டிய பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் வெளிநாட்டு படகில் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என உளவு பிரிவின் தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து, உடனடியாக 5 கப்பல்கள் வேறு வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. 

 விமானம் ஒன்றின் உதவியுடன் அந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் தேடுதல் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டது. இதில், இலங்கையை சேர்ந்த 3 படகுகள் தடுத்தி நிறுத்தி சோதனையிடப்பட்டன. அவற்றில், ஒரு படகில் இருந்து 300 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சோதனை செய்யப்பட்ட 3 படகுகள், படகில் இருந்த 19 ஊழியர்கள் கேரளாவுக்கு கூட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

இலங்கை படகில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள்; இந்திய கடலோர காவல் படை பறிமுதல் Reviewed by Author on March 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.