மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி சந்தியில் விபத்து-சாரதி காயம்.Photos
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி சந்தியில் விபத்து-சாரதி காயம்.
(மன்னார் நிருபர்)
(01-04-2021)
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி சந்தியில் கிரவல் மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் இன்று வியாழக்கிழமை (1) காலை 9.30 மணியளவில் குடை சாய்ந்து விபத்திற்கு உள்ளாகியதில் சாரதி காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மதவாச்சி பகுதியிலிருந்து மன்னார் நகருக்குள் கிரவல்; மண் ஏற்றிக் கொண்டு வந்த போதே குறித்த டிப்பர் வாகனம் தள்ளாடி வை சந்தியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதன் போது குறித்த வீதியினால் பயணித்தவர்களினால் குறித்த டிப்பர் வாகன சாரதி மீட்கப்பட்டு காயத்துடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி சந்தியில் விபத்து-சாரதி காயம்.Photos
Reviewed by Author
on
April 01, 2021
Rating:

No comments:
Post a Comment