ரசிகரிடம் இருந்து செல்போனை பிடுங்கிய விவகாரம்.. மன்னிப்பு கேட்டார் அஜித்
இதனால் கடுப்பான அஜித் அவரது செல்போனை பிடுங்கினார்.
மேலும் வாக்குச்சாடிக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை, செல்போனை பயன்படுத்தாதீர்கள் என அறிவுரை கூறினார். அஜித் ரசிகரிடமிருந்து செல்போனை பிடுங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில் நடிகர் அஜித், போனை பிடுங்கிய ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சாரி சாரி என்று அஜித் அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.வாக்குச்சாவடிக்குள் போனை கொண்டு வந்து போட்டோ எடுக்க முயன்ற ரசிகருக்கும் அறிவுரை வழங்கிய அஜித் அவரிடம் வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் அனுமதியில்லை. அதனால் போட்டோ எடுக்காதீர்கள் என்று அட்வைஸ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து #அஜித் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. அஜித் வாக்களித்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
ரசிகரிடம் இருந்து செல்போனை பிடுங்கிய விவகாரம்.. மன்னிப்பு கேட்டார் அஜித்
Reviewed by Author
on
April 06, 2021
Rating:

No comments:
Post a Comment