அண்மைய செய்திகள்

recent
-

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. Carnivak-Cov என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யாவின் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது. 

 கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கிய Carnivak-Cov தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் போது நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சோதனை முடிவில் தடுப்பூசி பாதிப்பில்லாதது எனவும் விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை வழங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா, போலந்து, அவுஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் Carnivak-Cov தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன.

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா Reviewed by Author on April 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.