பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்
அத்துடன், ‘துாய்மையான நகரம் தூய்மையான கரங்கள்’ என நாம் மக்களுக்கு வழங்கியத வாக்குறுதிக்கு அமைவாக நடந்துகொள்வதே யாழ். மாநகர மக்களுக்கான தனது பணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பணியை செம்மையாகவும், முன்மாதிரியாகவும் செய்வதற்கு எடுத்த முயற்சியை மிகத் தவறாக வியாக்கியானம் செய்து தன்னை கைதுசெய்தார்கள் என மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தன்னுமைய பயணம் மிக நேர்மையானது எனவும் வெளிப்படையானது என்பதுடன் மக்களுக்கானது என அவர் கூறியுள்ளார்.
மேலும், பாதை எப்படியானது என்பதைப் புரிந்துகொண்டே பயணத்தை ஆரம்பித்ததாகவும் எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னுடைய பயணம் நின்றுவிடாது என்றும் மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்
Reviewed by Author
on
April 10, 2021
Rating:

No comments:
Post a Comment