I Road திட்டத்தின் கீழ் மன்னாரில் உள்ள வீதிகளுக்கு காப்பெட் சரியான முறையில் போடப்படுகின்றதா??
இந்த காலப்பகுதியில் தாரின் மேற்பரப்பை பாதுகாக்க இரண்டு வகையான நடைமுறை செயற்படுத்தப்படும்,
1) வீதி வாகனங்கள் செல்லமுடியாதபடி மூடப்பட்டு அஸ்பால்ட் இட்டு பூர்த்தியாக்கப்பட்ட பின்னரே அவ்வீதியூடு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அல்லது,
2) ப்ரைம் (Prime) இடப்பட்ட வீதியின் மேல் மணல் பரப்பப்பட்ட பின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
Asphalt போடுவதற்கு முன்பாக அந்த மணல் அகற்றப்பட்டு வீதி சுத்தப்படுத்தப்படும். பின்னரே காப்பெட் ( Asphalt) இடப்படும்.
அவ்வாறு ப்ரைம் இடப்பட்ட வீதியின் மேற்பரப்பு பாதிக்கப்படாமல் இருந்தால் மாத்திரமே அதன் மீது போடப்படும் காப்பெட் ( Asphalt) சரியான முறையில் பொருந்தி வீதி நீண்ட நாட்களுக்கு பாதிப்படையாமல் இருக்கும்.
நடைமுறை இவ்வாறிருக்க, இவ் "I Road" திட்டத்தின் கீழ் நானாட்டான் வைத்தியசாலை முன்னான "நானாட்டான் - முருங்கன்" வீதியின் சுமார் 300 m நீளமான பகுதி 29 ஆம் திகதி இரவு ப்ரைம் இடப்பட்டு மேற்பரப்பில் மணல் இடப்படாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் பின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இவ்வீதியின் மேற்பரப்பில் அடுத்தநாளே அதாவது 30 ஆம் திகதி மதியம் அஸ்போல்ட் இடப்பட்டுள்ளது. இது பிழையான நடைமுறையாகும். இவ்வாறு செய்வதால் இப்போது அழகாக காப்பெற் இடப்பட்டு காணப்படும் இவ்வீதி மிகக்குறுகிய காலத்திலேயே பழுதடைந்து விடலாம்.
மன்னாருக்கு அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படுவதே அரிதான விடயம். அதைவிட இத்திட்டத்தின் கீழ் இடப்படும் வீதிகளின் எதிர் பார்க்கப்படும் பாவனைக்காலம் ( Design Life)15 வருடங்கள், ஒரு வேளை இந்த வீதி மூன்று வருடத்தில் பழுதடைந்து விடுமாயின் இன்னும் 12 வருடங்களுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது.
எமது மக்கள் அந்த 12 வருடமும் ( எழுத்தூர் வீதி போல்) பழுதடைந்த பாதையையே பாவிக்க நேரிடும்.
இந்த திட்டத்தின் ஒப்பந்தக்காரர் (contractor) KDAW என்னும் நிறுவனம். சரி அவர்கள்தான் விரைவாக முடிக்க வேண்டும் என்பதால் தரத்தை யோசிக்காமல் செய்கிறார்கள் என்று வைப்போம். அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை செய்து அனுமதி வழங்கும் MG consultant company என்ன செய்கிறார்கள்?? அதற்குதானே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது?? இந்த 300 m பாதையையும் திரும்ப போடவைக்க யாராலும் முடியுமா???
Rajkumar Marius
I Road திட்டத்தின் கீழ் மன்னாரில் உள்ள வீதிகளுக்கு காப்பெட் சரியான முறையில் போடப்படுகின்றதா??
Reviewed by Author
on
April 07, 2021
Rating:
Reviewed by Author
on
April 07, 2021
Rating:













No comments:
Post a Comment