அண்மைய செய்திகள்

recent
-

பயணக் கட்டுப்பாடு விதிகள் - 22,000 பொலிஸார் கண்காணிப்பில்

நேற்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 இக்காலப் பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர். இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடை அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

 பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு. இதேபோன்று எவருக்காவது அத்தியாசிய மருந்துவகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அதனை பெற்றுக்கொள்வதற்காக செல்ல முடியும். அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும். குறிப்பாக பேக்கரி தயாரிப்புக்கள் உணவுப் பொருட்கள் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்கள் அடங்கலான நடமாடும் வாகன விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு விதிகள் - 22,000 பொலிஸார் கண்காணிப்பில் Reviewed by Author on May 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.