திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து- ஸ்தலத்தில் பலி!
இதன்போது வானின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் தனது பயண வழியில் இருந்து விலகி எதிர்திசைக்கு சென்றதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் போது வான்முற்றாக சேதமடைந்ததுடன் குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் லொறி தடம்புரண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெற்ற விபத்து காரணமாக வீதி எங்கும் வாகனங்களின் பாகங்கள் சிதறிக்கிடப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தம்பலகமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து- ஸ்தலத்தில் பலி!
Reviewed by Author
on
May 22, 2021
Rating:

No comments:
Post a Comment