அண்மைய செய்திகள்

recent
-

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் அமைந்தகரையில் உள்ள மரு‌த்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மன்சூர் அலிகானுக்கு தொண்டாமூத்தூரில் வாடைக்கு கூட வீடு கொடுக்க மக்கள் முன்வரவில்லை என்று அவரே வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டார். மன்சூர் அலிகான் மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சி‌கி‌ச்சைக்கு தயாராகி வருகிறார். நடிகர் விவேக் உயிரிழந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதனால் தடுப்பூசி குறித்து அவதூறாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்தது என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி Reviewed by Author on May 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.