அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்- ஐந்து துறைகளின் முழு விபரம்!
இதன்படி, கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தரபவன் முதலிடம் பெற்றுள்ளார்.
அதேபோல், விஞ்ஞானப் பிரிவில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார்.
வர்த்தகப் பிரிவில், காலி மாவட்டம் சங்கமித்த வித்தியாலய மாணவி அமந்தி இமாசா மதநாயக்க அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
அத்துடன், கலைப்பிரிவில் ப்ரிஸ்படேரியன் மகளிர் கல்லூரி மாணவி சாமல்கா செவ்மினி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை, உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் ஹொரன தக்சிலா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுசிகா சந்தசர என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.
பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.
அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்- ஐந்து துறைகளின் முழு விபரம்!
Reviewed by Author
on
May 04, 2021
Rating:

No comments:
Post a Comment