அண்மைய செய்திகள்

recent
-

கெண்டயினர் லொறி விபத்தில் இருவர் காயம்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 டொன் உரத்தை ஏற்றி பயணித்த கெண்டயினர் லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலையையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது.

 லொறி விழுந்ததலில் வீட்டில் இருந்த எவருக்கும் எந்த வித பாதிப்புகள் ஏற்படாத நிலையில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை தொழிநுட்ப கோளாறு காரணமாகவே லொறி விபத்துக்குள்ளானதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பல வீதித்தடைகளை அமைத்துள்ளது

கெண்டயினர் லொறி விபத்தில் இருவர் காயம் Reviewed by Author on May 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.