அண்மைய செய்திகள்

recent
-

காமெடியன் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்

நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தவர் நெல்லை சிவா. அவர் 80களில் நடிக்க தொடங்கி தற்போது வரை குணச்சித்திர நடிகராக, காமெடியனாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். வடிவேலு உடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி எல்லாம் பெரிய ஹிட். ‘கெனத்தை காணம்’ காமெடி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அவர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் நெல்லை சிவா அவர்கள் இன்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். 

நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. கொரோனா பரவல் வேகமெடுத்த பிறகு விவேக், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல சினிமா துறை பிரபலங்கள் மரணம் அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது நெல்லை சிவா மரணமும் மேலும் ஷாக் கொடுத்து இருக்கிறது. அவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காமெடியன் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம் Reviewed by Author on May 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.