அண்மைய செய்திகள்

recent
-

IPL போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையால், IPL போட்டியை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட IPL போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் IPL போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை, மும்பையில் IPL ஆட்டங்கள் நடைபெற்றன.

 தற்போது அஹமதாபாத், டெல்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர், CSK பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதையடுத்து கொல்கத்தா – பெங்களூா் அணிகள் நேற்றிரவு மோத இருந்த ஆட்டமும் நாளை நடைபெறுவதாக இருந்த CSK – ராஜஸ்தான் ஆட்டமும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு சன்ரைசர்ஸ் அணியையும் விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 இதையடுத்து, சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த மும்பை – சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருந்தது. தில்லி வீரர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் IPL போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து, IPL 2021 போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக BBCI-இன் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ​ANI செய்தி நிறுவனத்திடம் தகவல் அளித்துள்ளார்.

IPL போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு Reviewed by Author on May 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.