மன்னாரில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான நீர் கட்டுரை குளத்தில் இருந்து வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டது.
இதேவேளை விவசாய ஆராய்ச்சி பண்ணைக்காக முருங்கன் 14 ஆம் கட்டை வாய்க்காலில் இருந்து நீர் விநியோகிக்கப்பட உள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டு பயிர்ச் செய்கைக்கான நீர் விநியோகத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
கொரோனா தொற்று அபாயத்தை கருத்திற்கொண்டு குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் சிவராசா யோகராசா , மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அப்துல் சுக்கூர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கண்டிருந்தனர்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் கட்டுக்கரை குளத்தில் தற்போது 7.11 அடி நீர் காணப்படுவதோடு, வான் பாய்ந்து கொண்டிருப்பதாக மன்னார் மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் சிவராசா யோகராசா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான நீர் கட்டுரை குளத்தில் இருந்து வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டது.
Reviewed by Author
on
May 10, 2021
Rating:
Reviewed by Author
on
May 10, 2021
Rating:









No comments:
Post a Comment