மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் 5 கொரோனா மரணங்கள்; 7 மாத கர்ப்பிணியும் உயிரிழப்பு
வயிற்றிலிருந்த குழந்தையும் இதன்போது உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 44 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 3622 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாளை (08) 25,000 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக மாவட்டத்தின் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமையளிக்கப்படும் என கே. கருணாகரன் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் 5 கொரோனா மரணங்கள்; 7 மாத கர்ப்பிணியும் உயிரிழப்பு
Reviewed by Author
on
June 08, 2021
Rating:

No comments:
Post a Comment