மட்டக்களப்பு- இருதயபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
குறித்த நிறுவனத்தின் காரியாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்து மாவட்ட செயலகத்திற்கு கடமைக்கு சென்றுவருவதாகவும் இரவில் இங்கு பாதுகாவலராகவும் செயற்பட்டு வரும் இவர் வழமைபோல நேற்று வெள்ளிக்கிழமை கடமையில் இருந்து திரும்பி அங்கு இரவு உணவை உண்டபின் காரியாலய கதவைப் பூட்டிவிட்டு படுக்கைக்கு சென்றுள்ளார்.
சம்பவதினமான இன்று காலை 11 மணி ஆகியும் காரியாலய கதவு திறக்கப்படாததையடுத்து கதவை உடைத்து உள் சென்றபோது அங்கு அவர் படுத்தபடுக்கையில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு- இருதயபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
Reviewed by Author
on
June 05, 2021
Rating:

No comments:
Post a Comment