அண்மைய செய்திகள்

recent
-

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் 2500/- கொடுப்பனவு

இன்று முதல் தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு: 10. முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ´குரு அபிமானி´ கொடுப்பனவு வழங்கல் ´நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்´ கொள்கைப் பிரகடனத்திற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங்காணப்பட்டு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட திட்டவட்டமான பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தரக் கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250/= ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2500/= ரூபாவாக அதிகரிப்பது உகந்ததென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்காக, 2021 ஜூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கத்தால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் 250/= ரூபா மாதாந்தக் கொடுப்பனவு, அடையாளங்காணப்படும் குறிகாட்டிகளுக்கமைய தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500/= ரூபா வரை அதிகரிப்பதற்கும், அதன் முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் 2500/- கொடுப்பனவு Reviewed by Author on June 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.