கொவிட் – 19 தடுப்பு நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு கூட்டம்
எவ்வாறாயினும், பொதுக் கூட்டங்கள், திருமணங்கள், கட்சிக் கூட்டங்கள் விருந்துக்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார். அத்தோடு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
அத்தோடு அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கையில் குறைவை காண முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் தெரிவித்தார்.
அத்தோடு நாடு முழுவதிலுமான புள்ளிவிபரங்களை புதுபித்து தருமாறு கேட்டுக்கொண்ட அவர், பீசிஆர், அண்டிஜன் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அதேபோல் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் எடுத்துரைத்த அவர், சினோபார்ம் தடுப்பூசி தொகை ஒன்று விரைவில் நாட்டிற்கு கிடைக்கப்பெற உள்ளதெனவும், அவற்றில் அதிகளவான தடுப்பூசிகளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முன்னணி ஆடைத் தொழிற்சாலைகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பிலான விபரங்களையும் வெளியிட்டார்.
ஏற்கனவே கொக்கல மற்றும் சீத்தாவாக்கை பகுதிகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் வடகிழக்கில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபியின் பணிப்புக்கமைய தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் அரச அதிபர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்கால அவசியத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களை திறக்க உள்ளதாக தெரிவித்த அவர், இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட் – 19 தடுப்பு நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு கூட்டம்
Reviewed by Author
on
June 27, 2021
Rating:
Reviewed by Author
on
June 27, 2021
Rating:


No comments:
Post a Comment