அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உணவுக்காக அலைந்த கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்கிய பொலிஸார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி மிருகங்களும் உணவு இன்றி பாதீக்கப்பட்டுள்ளது. -மன்னார் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு,மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது. 

இதனால் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் உணவு இன்றி உள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக மன்னார் மாவட்ட போக்கு வரத்து பொலிஸ் பிரிவினர் இணைந்து மன்னார் மாவட்டத்தின் தற்போதைய பயண கட்டுப்பாடு மற்றும் கடை அடைப்பினால் கட்டாக்காலி நாய்கள் உணவு இன்றி தவிர்த்து வருகின்ற நிலையில் இன்று வியாழக்கிழமை (3) காலை போக்குவரத்து பிரிவு பொலிஸார் உணவு சமைத்து நகருக்குள் இருக்கும் கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்கி முன்னுதாரனமாக செயல்பட்டனர்.
                 








மன்னாரில் உணவுக்காக அலைந்த கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்கிய பொலிஸார். Reviewed by Author on June 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.