தனிமைப்படுத்தல் சட்டம் எவருக்கும் விதிவிலக்கானது அல்ல – அரசாங்கம்!
தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
இச்சட்டம், ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி ஆகியோருக்கு மாத்திரம் விதிவிலக்கானது அல்ல.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உலக சுகாதார தாபனம் பரிந்துரைத்துள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்களை முறையாக பின்பற்றினால் வைரஸ் தொற்றில் இருந்து மீளலாம்.
இதன் காரணமாகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கொரோனா விடயத்தில் சுயநலமாக எவரும் செயற்பட முடியாது.
நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தரப்பினரது பொருப்பற்ற செயற்பாட்டின் காரணமாக மீண்டும் நெருக்கடியான சூழ்நிலைக்கு செல்ல முடியாது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் நிறைவு பெறும். நாட்டு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியிலும், சமூகஞ்சார் ரீதியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு போராட்டத்தில் ஈடுப்படும் தருணம் இதுவல்ல, ஆகவே போராட்டங்களில் ஈடுபடுவதை சிவில் தரப்பினரும், தொழிற்சங்கத்தினரும் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் எவருக்கும் விதிவிலக்கானது அல்ல – அரசாங்கம்!
Reviewed by Author
on
July 16, 2021
Rating:
Reviewed by Author
on
July 16, 2021
Rating:


No comments:
Post a Comment