தடுப்பூசியின் இரு டோஸ்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில்; 300 இற்கு மேற்பட்ட பொலிஸாருக்கு கொரோனா தொற்று
300 இற்கு மேற்பட்ட பொலிஸார் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் சுகாதார நிபுணர்களுக்கு இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளது, நிலைமை குறித்து கவலைகளை தெரிவித்துள்ளதுடன், தொற்றுக்குள்ளாகியுள்ள பொலிஸார் எவரும் வைரஸின் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளால் வைரஸின் கடுமையான வடிவத்தையும் இறப்புகளையும் தடுக்க முடியும் என்றாலும், மக்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது என சுகாதார அதிகாரிகள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸார் அந்தந்த மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது, 30 வயதிற்கு மேற்பட்ட 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியின் முதல் செலுத்துகையை பெற்றுள்ளனர்.
வேகமாக பரவி வரும் டெல்டா வைரஷினால் ஏற்படும் அழிவைத் தடுக்க தடுப்பூசிகள் அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்படுவதை தடுப்பூசிகள் தடுக்காது என்றாலும், முழுமையான தடுப்பூசி செலுத்துகையானது தொற்றாளர்களுக்கு வைரஸின் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதுடன் இறப்புக்களை தடுக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாளாந்தம் ஏறத்தாழ 300,000 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
தடுப்பூசியின் இரு டோஸ்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில்; 300 இற்கு மேற்பட்ட பொலிஸாருக்கு கொரோனா தொற்று
Reviewed by Author
on
July 21, 2021
Rating:
Reviewed by Author
on
July 21, 2021
Rating:


No comments:
Post a Comment