அண்மைய செய்திகள்

recent
-

கௌதாரிமுனை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !

பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்படடள்ளது. அதனடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக இன்று(26.07.2021) ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பயனாளர்கள் கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான வலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏறாபாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி வலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடலில் வடக்கு மாகாணத்தில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 இந்நிலையில், கௌதாரிமுனை பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் நிரந்தர வாழ்வாதாரத்தினை வழங்கக் கூடிய கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதனால், இதுவரை சுமார் 30 இற்கும் மேற்பட்டவர்கள் கடலட்டைப் பண்ணைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் இதுவரை பொருத்தமான 16 இடங்களை நக்டா எனப்படும் தேசிய நீரயல் வள அபிவிருத்தி அதிகார சபை அடையாளப்படத்தியுள்ள நிலையில், அவற்றில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 





கௌதாரிமுனை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை ! Reviewed by Author on July 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.