ரிசாத்தின் வீட்டில் பணியாற்றும் நபரின் கையடக்கத் தொலைபேசியைக் கைப்பற்றி விசாரணை - பொலிஸ் பேச்சாளர்
மேலும், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசி நேற்றைய தினம் பொரளை பொலிஸாரால் கைப்பற்றப் பட்ட பின்னர் ஏதேனும் தகவல்கள் அழிக்கப் பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் குறித்த தொலைபேசி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுமி ஆரம்பத்தில் வசித்த, கல்வி கற்ற பகுதியில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் பாடசாலைஅதிபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், குறித்த குழுவினர் சிறுமி முன்னதாக கல்வி கற்ற அவிசாவளை, புவக்பிட்டி - கிரிவந்தல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைக்குச் சென்று பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினமும் குறித்த இரண்டு குழுவினரும் டயகம பகுதிக்குச் சென்று,சிறுமியின் தாயாரிடம் மீண்டும் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
ரிசாத்தின் வீட்டில் பணியாற்றும் நபரின் கையடக்கத் தொலைபேசியைக் கைப்பற்றி விசாரணை - பொலிஸ் பேச்சாளர்
Reviewed by Author
on
July 21, 2021
Rating:
Reviewed by Author
on
July 21, 2021
Rating:



No comments:
Post a Comment