ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை – பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள இணையவழி கற்றல் புறக்கணிப்பு இன்று 16ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது இந்த பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் அந்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை – பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!
Reviewed by Author
on
July 27, 2021
Rating:

No comments:
Post a Comment