அண்மைய செய்திகள்

recent
-

பாரிஸ் வீடொன்றில் இருந்து தமிழ் தாயும் - மகளும் சடலமாக மீட்பு

பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் என இருவரது சடலங்கள், இன்று காலை காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் காவற்துறையினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. 

கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டார் என்று கூறப்படுகிறது. அயலவர்களால் அவசர மீட்புப் பிரிவிவினரும் காவற்துறையினரும் தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தந்தையாரும் அவரது இரண்டு புதல்வர்களும் மிகவும் அதிர்ச்சியுற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றும் பின்னர் அவசர முதலுதவிப் பிரிவினரால் மூவரும் பொலிஸ் பாதுகாப்புடன் பொந்துவாஸ் மருத்துவமனைக்கு (centre hospitalier René-Dubos de Pontoise) கொண்டு செல்லப்பட்டனர் என்றும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


பாரிஸ் வீடொன்றில் இருந்து தமிழ் தாயும் - மகளும் சடலமாக மீட்பு Reviewed by Author on August 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.