அண்மைய செய்திகள்

recent
-

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்டு வருகின்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்டு வருகின்றது. நாங்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில்,சர்வதேசம் எங்களை திரும்பிப் பார்க்காமல் இருக்கிறது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையொட்டி இன்று (30) திங்கட்கிழமை காலை மன்னாரில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது. 

 இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்டு வருகின்றது. நாங்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில்,சர்வதேசம் எங்களை திரும்பிப் பார்க்காமல் இருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக எத்தனையோ வருடங்களாக வீதிகளில் இறங்கி போராடி உள்ளோம்.

எங்களுக்கு உரிய நீதியும்,தீர்வும் கிடைக்கும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், உறவுகள் திரும்பி எம்மிடம் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இன்று வரை ஒன்றுமே நடக்கவில்லை.இலங்கையில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி கதைக்கின்றோம். இளைஞர்களை காணவில்லை, வயதானவர்களை காணவில்லை. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகிறோம். ஆனால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை.

இந்த அரசாங்கத்திடம் இருந்து சர்வதேசம் எங்களுக்கு ஒரு நீதியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பல வருடங்களாக நாங்கள் வீதிகளில் நின்று போராடி வந்தோம். ஆனால் எங்களை சர்வதேசம் திரும்பி பார்ப்பது இல்லை.என்ன காரணம் என்று தெரியவில்லை. ஜெனிவாவில் பேச்சுவார்த்தையின் போது கூறினார்கள்.எங்களுக்கு விரைவில் தீர்வு ஒன்று கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் இலங்கையில் அரசாங்கத்தில் உள்ள அமைப்புகளின் சிங்கள அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் இலங்கையில் எவரும் காணாமல் போகவில்லை.காணாமல் போனவர்கள் என கூறப்படுகின்றவர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள் என்று. எனவே வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என கூறப்படுகிற எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை அரசாங்கம் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

அரசாங்கத்திடம் உள்ள எமது பிள்ளைகளை மீட்கவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சனைகளுக்கு மத்தியில் நாங்கள் போராட முடியாத நிலையில்,வீடுகளில் இருந்து தாய்மார் அழுது கொண்டு இருக்கிறார்கள். எனினும் நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிக்காக நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் பிள்ளைகளை எங்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள்.அல்லது என்ன நடந்தது என்று கூறுங்கள்.அது வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மன்னாரில் ஓ.எம்.பி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.மன்னாரில் மறைமுகமாகவே குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஓ.எம்.பி அலுவலகத்திற்கு ஒதுக்கிய பணத்தை அவர்களே வைத்துள்ளனர். 

 ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு அவர்கள் இதுவரை எவ்வித உதவிகளையும் செய்யவில்லை.கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சியில் இரகசியமான முறையில் ஓ.எம்.பி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இவ் அலுவலகங்களில் பதிவுகளை மேற்கொள்கின்ற போது எதையும் கொடுப்பதும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பணத்திற்காக போராடவில்லை. நீதிக்காக போராடுகின்றனர். அதை அரசாங்கமும், சர்வதேசமும் உணர்ந்துகொள்ள வேண்டும். தற்போது சில அம்மாக்களை ஒன்றினைத்து ஆடு தருகின்றோம்,மாடு தருகின்றோம் என ஓ.எம்.பி அலுவலத்தினூடாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் எவருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. 

 நாங்கள் இறந்த பிள்ளைகளுக்காக போராடவில்லை.உயிருடன் பிடிக்கப்பட்ட,ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்காகவே இன்று நாங்கள் வீதியில் நின்று போராடுகின்றோம். எனவே எங்களுக்கு சர்வதேசம் பதில் ஒன்றை கூறவேண்டும்.இவ் வருடத்திற்குள் எமக்கு சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும். -காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடும் பல அம்மாக்கள் மரணித்துக் கொண்டு இருக்கின்றனர் . அவர்களிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சர்வதேசம் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றது. என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்டு வருகின்றது Reviewed by Author on August 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.