அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒரு வாரம் தடுப்பூசி வாரமாக அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்து வதற்காக ஒரு வாரம் தடுப்பூசி வாரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார். 

 கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செலுத்த சுகாதார அமைச்சின் அனுசரணையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப் பூசி செலுத்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. நாட்டில் சுமார் 3,30,000 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 200,000 க்கும் மேற்பட்டோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 கொரோனா தடுப்பூசி செலுத்துவது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது என்றும் பைசர் , மொடோனா மற்றும் சைனோபாம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றவை என்று சுகாதாரத் துறை ஏற்கனவே பரிந்துரைத்துள்ளதாகவும் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் இதுவரை 20 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒரு வாரம் தடுப்பூசி வாரமாக அறிவிப்பு Reviewed by Author on August 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.