மட்டக்களப்பில் கொரோனாவால் 152 பேர் இதுவரை மரணம்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கோறளைப்பற்று மத்தி சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் செங்கலடி சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் பட்டிப்பளை சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 106 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேரும் வவுணதீவு சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும் செங்கலடி சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும் வாழைச்சேனை சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும் ஆரையம்பதி சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருமாக 303 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதுiரை 152 மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 3 வது அலையில் 143 மரணங்களும் அதில் 30 தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்ட 15 பேரும் 50 வயதுக்கு மேற்பட்டோர் 137 பேரும் மரணமடைந்துள்ளதுடன் அதில் மரணமடைந்தவர்கள் 54 வீதமானோர் ஆண்கள் ஆகும்.
மாவட்டத்தில் சிறுசிறு கொத்தணிகள் உருவாக காரணமாக இருந்தவை ஒன்று கூடல்களேயாகும் குறிப்பாக திருமணவீடுகள் மரணவீடுகள் கோவில்களுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்றியது எனவே ஒன்று கூடல்களை முற்றாக தவிர்க்கும் படசத்தில் தான் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்
இதேவேளை 651 கட்டில்கள் கொண்ட இடைதங்கல் முகாம்களும் கொரோன நிகிச்சையளிக்கும் நிலையங்களில் 118 கட்டில்களும் மட்டு போதனா வைத்தியசாலையில் 104 கட்டில்களும் தயார் நிலையிலுள்ளதுடன் அவசர சிகிச்சை பிரிவான காத்தான்குடியில் 6 கட்டில்கள் உள்ளதுடன் அவசரசிகிச்சை பிரிவுகள் வாழைச்சேனை களுவாஞ்சிக்குடி 14 கட்டில்களுடன் உருவாக்க உள்ளோம்
இருந்தபோதும் மாவட்டத்தை பொறுத்தவரையில் தற்பொழுது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் சிலர் கடைகளுக்கு சென்று வருகின்றனளர்
எனவே; அவர்களுக்கு என்ன தேவைப்படுகின்றதே அவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அந்த தேவைகளை பூர்தி செய்யுங்கள். தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் அவர்களும் வீட்டை விட்டு எந்த சந்தர்ப்பதிலும் வரவேண்டாம் அதனை மீறி வெளியில் வருபவர்களுக்கு எதிராக கொரோனா சட்டத்தின் கீழ் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கொரோனாவால் 152 பேர் இதுவரை மரணம்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
Reviewed by Author
on
August 18, 2021
Rating:

No comments:
Post a Comment