அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலி பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை இரண்டாவது பகுதி தடுப்பூசி

10.08.2021 செவ்வாய்க்கிழமை காலை 07.30மணி முதல் பகல் 01:00pm வரை முத்தரிப்புத்துறை பாடசாலையில் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கான கோவிட்-19க்கு எதிராக வழங்கப்பட்ட pfizer தடுப்பு மருந்தின் இரண்டாவது பகுதி (2nd dose) வழங்கும் நடவடிக்கையானது இடம்பெற உள்ளது. 

 இதில் ஏற்கனவே முத்தரிப்புத்துறை பாடசாலையில் pfizer தடுப்பு மருந்தின் முதல் பகுதியை (1st dose) பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம் வருகை தந்து இவ் இரண்டாவது பகுதி தடுப்பு மருந்தினை பெற்றுக் கொள்ளமுடியும். தடுப்பு மருந்தினை பெற்றுக் கொள்ள வருகைதரும் பொழுது தேசிய அடையாள அட்டை மற்றும் தடுப்பு மருந்து அட்டை என்பவற்றை கொண்டுவருதல் கட்டாயமாகும். தடுப்பு மருந்தினை பெற்று கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.

 தகவல்- *சுகாதார வைத்திய அதிகாரி ,முசலி*

மன்னார் முசலி பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை இரண்டாவது பகுதி தடுப்பூசி Reviewed by Author on August 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.