அண்மைய செய்திகள்

recent
-

கொவிட்-19 பரவல்: பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன !

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் சேவைகள் எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்த ஓர் அறிக்கையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ்களுக்கு ஒன்லைனில் அல்லது மின்னஞ்சல் மூலம் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேவையின் அடிப்படையில் சான்றிதழ் வெளிவிவகார அமைச்சு அல்லது விண்ணப்பதாரரின் முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது. 

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2001 மற்றும் அதன் பின்னர் க.பொ.த. (சா/ த) மற்றும் (உ/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் 0112788137 எனும் தொலைபேசி இலக்கத்திலும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 0112784323 எனும் இலக்கத்திலும் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல்: பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன ! Reviewed by Author on August 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.