அண்மைய செய்திகள்

recent
-

தடுப்பூசி செலுத்திய அட்டை அவசியமாகும்..!

காத்தான்குடி நகரசபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம் பொன்ற இடங்களுக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள செல்லும் 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையினை உடன் வைத்திருத்தல் அவசியமாகும் என காத்தான்குடி நகருக்கான கொவிட்-19 தடுப்பு செயலணி அறிவித்துள்ளது. கொரோனா நிலமை தொடர்பிலும் நாட்டில் வேகமாகப் பரவிவரும் ´டெல்டா´ திரிபு தொடர்பிலும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது கடமை அல்லது நடக்க இயலாமை காரணமாக வீடுகளை விட்டுவெளியேற முடியாமல் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அனைவரும் தங்களது பகுதி கிராம சேவகரை தொடர்புகொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை ஆற்றங்கரை போன்ற பொது இடங்களில் பொது மக்கள் கூடுவது மறு அறிவித்தல்வரை தொடர்சியாக தடை செய்யப்பட்டுள்ளது.


 திருமண வலீமா மண்டபங்கள் வாடகைக்கு விடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் திருமணம் நிகழ்வுகள் மாத்திரம் 25 பேருடன் மட்டுப்படுத்தப்படுவதோடு, கலந்து கொள்ளும் அனைவரது தகவல்களும் பதியப்பட வேண்டும். வெள்ளிக்கிழமை சகல பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ தொழுகையை ஏற்பாடு செய்வதோடு 12.30 மணிக்குள் தொழுகையை முடித்துக்கொள்ள வேண்டும். ஊரில் வைரஸ்பரவல் அதிகரித்திருப்பதாலும் வயது வித்தியாசமின்றி பலர் வைத்தியசாலைகளில் கவலைக்கிடமாக இருப்பதாலும் பொது மக்கள் தேவையற்ற பயணங்கள் ஒன்றுகூடல்களை முற்றாக நிறுத்திக் கொள்ளவும். 

பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மக்கள் கூடியிருக்கும் இடங்கள் மற்றும் கடற்கரை போன்றவற்றில் தொடர்சியாக மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால் மேற்படி கட்டுப்பாடுகளை பொது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் உதாசீனம் செய்யும் பட்சத்தில் எமது ஊரை மீண்டும் முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்திற்குச் செல்லநேரிடும் என்று தெரிவித்துக் கொள்கின்றோம். என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி செலுத்திய அட்டை அவசியமாகும்..! Reviewed by Author on August 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.