சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கைக்கு 13 ஆவது இடம்
இலங்கையில் நேற்றைய தினமும் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 58 பேரும் 60 வயதிற்கு மேற்பட்ட 151 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை புதிதாக 4 ஆயிரத்து 561 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 16 ஆயிரத்து 931 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 191 பேர் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.
இதேவேளை சர்வதேச தரவுகளின் அடிப்படையில் நேற்றைய தினம் கொரோனா மரணங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கைக்கு 13 ஆவது இடம்
Reviewed by Author
on
August 28, 2021
Rating:

No comments:
Post a Comment