பாடசாலைகளை நவம்பரில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை
பாடசாலைகள் திறப்பதற்கான திட்டத்தைக் கல்வி அமைச்சு ஏற்கனவே தயார் செய்துள்ளது.
அந்தத் திட்டத்தின் படி நவம்பர் மாதற்கு முன்னர் பாடசாலைகளைத் திறக்க எதிர்பார்த்துள்ளனர்.
நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் கொரோனா தடுப்பு செயலணிக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பாடசாலைகளைத் திறப்பது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டது.
குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புற பாடசாலைகள், ஆரம்பப் பாடசாலைகளைத் திறக்கலாம் என அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
இதற்காக மாகாண ஆளுநர்களின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஸூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் கற்பித்தல் நடவடிக்கையில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக இதன்போது வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
12-18 வயதுடைய மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நட வடிக்கையைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தினார்.
க.பொ.த சாதாரண தர முடிவுகளை வெளியிடுவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. செயன்முறை பரீட்சை இதுவரை நடத்தப்படாததால் முடிவுகள் வெளியிடுவதற்குத் தாமதமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படாமல் பரீட்சை முடிவுகளை வெளியிட இதன் போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளை நவம்பரில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை
Reviewed by Author
on
September 11, 2021
Rating:

No comments:
Post a Comment