அண்மைய செய்திகள்

recent
-

தமிழீழ எழுச்சிப் பாடல்களை தனது இனிய கம்பீரக் குரலால் பாடித் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர்

தமிழீழ எழுச்சிப் பாடல்களை தனது இனிய கம்பீரக் குரலால் பாடித் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர் -வர்ணராமேஸ்வரன் இழப்பிற்கு கனேடிய தமிழர் பேரவை துயரஞ்சலி தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்கியவரும், இணையற்ற இசையாற்றல் கொண்டவருமான சங்கீத இசைக் கலைஞர் திரு. வர்ண ராமேஸ்வரன் அவர்களின் மறைவுச் செய்தி எம்மையெல்லாம் ஆறாத்துயரத்தில் ஆழ்த்துகிறது.

என கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது சமூகசேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தமிழையும், தமிழர் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இசைப் பாடல்களையும், தமிழீழ எழுச்சிப் பாடல்களையும், தனது இனிய கம்பீரக் குரலால் பாடித் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர் திரு. வர்ண ராமேஸ்வரன் அவர்கள் ! இவரது இழப்பானது கனடியத் தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ்ச் சங்கீத உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை நாம் இழந்தாலும், அவரது பாடல்கள் என்றும் எம்முடன் உயிருடன் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்தத் துயர வேளையிலே அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!என தெரிவித்துள்ளது.

தமிழீழ எழுச்சிப் பாடல்களை தனது இனிய கம்பீரக் குரலால் பாடித் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர் Reviewed by Author on September 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.