மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்த லொகான் ரத்வத்தை எம்மை அச்சுறுத்தினார் - அநுராதபுரம் சிறைக்குச் சென்ற மனோவிடம் கைதிகள் தெரிவிப்பு
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி வெளியிடுமளவிற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது குறித்து நிலைமையை ஆராய்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார உள்ளிட்டோர் இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாம் சிறைச்சாலைக்கு வருகை தரவுள்ளதாக ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் இன்று எமக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சபாநாயகரை தொடர்பு கொண்டதன் பின்னரே எமக்கு உள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பிரஜைகளின் நிலைமை என்னாவாயிருக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
நாம் உள்ளே சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்ததாகவும் , போதையில் இருந்தமையால் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தியதாகவும் கைதியொருவர் கூறினார்.
இதன் போது தவறுதலாகவேனும் அந்த துப்பாக்கி இயக்க்பபட்டு நாம் கொல்லப்பட்டிருந்தால் நாம் அவரை கொல்ல முற்பட்டதால் ஏற்பட்ட கலவரம் என்று கூறியிருப்பார்கள் என்றும் அந்த கைதிகள் எம்மிடம் தெரிவித்தனர்.
இந்த கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களின் மனதை வெல்லுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.
மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்த லொகான் ரத்வத்தை எம்மை அச்சுறுத்தினார் - அநுராதபுரம் சிறைக்குச் சென்ற மனோவிடம் கைதிகள் தெரிவிப்பு
Reviewed by Author
on
September 18, 2021
Rating:
Reviewed by Author
on
September 18, 2021
Rating:



No comments:
Post a Comment