அண்மைய செய்திகள்

recent
-

போதையில் பெற்றோலை உடலில் ஊற்றிய குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி ; அல்லைப்பிட்டியில் சம்பவம்

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளை களின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்குச் சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரைத் தாக்கியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்குச் சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். அவ்வேளை அவரது உடலில் பரவியிருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது. இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டிருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது. 

இந்நிலையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயலவர்கள் கூடி தீயை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


போதையில் பெற்றோலை உடலில் ஊற்றிய குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி ; அல்லைப்பிட்டியில் சம்பவம் Reviewed by Author on September 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.