மன்னார் விடத்தல் தீவு 5 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீட்டினுள் மது போதையில் சென்ற குழுவினர் தாக்குதல்
மேலும் குறித்த வீட்டில் உள்ள 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரையும்,15 வயதுடைய மாணவி ஒருவரையும் தாக்கியுள்ளது டன், குறித்த இரு யுவதிகளும் தற்போது பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் காரணமாக வீட்டில் உள்ள இரு குழந்தைகள் அச்சமடைந்துள்ள நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த வீடு கடுமையான தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.
நேற்றைய தினம் இரவு குறித்த பகுதிக்குச் சென்ற அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள தோடு வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அன்ரனி ஜோசப் (வயது-44) என்ற குடும்பஸ்தர் சுய நினைவற்ற நிலையில் உள்ளதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் விடத்தல் தீவு 5 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீட்டினுள் மது போதையில் சென்ற குழுவினர் தாக்குதல்
Reviewed by Author
on
September 20, 2021
Rating:

No comments:
Post a Comment