அண்மைய செய்திகள்

recent
-

பல மாதங்களாக பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத நிலையில் இழுத்து மூடும் நிலையில் பிரபல தொலைக்காட்சி.

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கி வந்த பிரபல வலையமைப்பு பல மாதங்களாக அலுவலக பணியாளர்கள் மற்றும் பிராந்திய செய்தியாளர்களுக்கான சம்பளத்தை வழங்காத நிலையில், தற்போது குறித்த தொலைக்காட்சி வலையமைப்பு இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குறித்த தொலைக்காட்சி வலையமைப்பின் யாழ் அலுவலகத்தில் கடமையாற்றிய சுமார் 30 இற்கும் அதிகமான பணியாளர்களை எவ்வித முன் அறிவித்தலும் இன்றி இறுதியான இரண்டு மாத சம்பளம் வழங்கப்படாமல் திடீர் என குறித்த பணியாளர்கள் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

 மேலும் குறித்த ஊடக வலையமைப்பின் யாழ் அலுவலகத்தில் கடமையாற்றிய முக்கிய பணியாளர்களுக்கு சுமார் 3 மாத ஊதியம் வழங்கப்படாமையால் குறித்த பணியாளர்களும் விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணியாளர்களுக்கு (ETP,EPF) ஆகியவை கடந்த மூன்று வருடங்களாக செலுத்தப்படவில்லை எனவும்,குறித்த பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குறித்த தொலைக்காட்சி வலையமைப்பின் நிர்வாகத்திற்கு எதிராக யாழ் ஊழியர் சேமலாப நிதியத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் குறித்த தொலைக்காட்சி வலையமைப்பின் மாவட்ட செய்தியாளர்களாக கடமையாற்றிய அனைவருக்கும் சுமார் 5 மாத கால சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது.



பல மாதங்களாக பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத நிலையில் இழுத்து மூடும் நிலையில் பிரபல தொலைக்காட்சி. Reviewed by Author on October 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.