அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டத்திற்கான நேர்முக பரீட்சை மன்னாரில்.

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கான நேர்முக பரீட்டைகள் இடம் பெற்று வருகின்றது மன்னார் நகர் பிரதேச செயளாலர் ம.பிரதீபின் வழிகாட்டலில் மன்னார் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயளாலர் கனகாம்பிகை சிவசம்பு தலைமையில் காணி கிளை அதிகாரிகளினால் முதல் கட்ட நேர்முக பரீட்சைகள் இடம் பெற்று வருகின்றது

 விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் அடிப்படையில் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் சுய தொழில் தொடர்பான திட்ட முன்மொழிவு மற்றும் நிதி விபரம் தொடர்பான ஆவணங்கள் குறித்த நேர் முக பரீட்சையின் போது கோரப்பட்டதுடன் மேலதிக அனுபவங்கள் உட்பட சுய தொழில் முயற்சி தொடர்பான பின்புலங்கள் தொடர்பாகவும் பரீட்சிக்கப்பட்டுள்ளன
                





மன்னாரில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டத்திற்கான நேர்முக பரீட்சை மன்னாரில். Reviewed by Author on October 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.