மன்னாரில் மலசல கூட தொகுதி பயனாளிகளிடம் கையளிப்பு
கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ளத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பின்தங்கிய நிலையில் உள்ள மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் உள்வாங்கப்பட்டு அவர்களில் 16 குடும்பங்களுக்கான மலசல கூடம் RAHAMA நிறுவனம் மற்றும் மன்னார் நகர் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் பூரணப்படுத்தப்பட்டு வைபவ ரீதியாக மன்னார் அரசாங்க அதிபர் ஊடாக பயணாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது
குறித்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் மன்னார் நகர் பிரதேச செயளாலர் மனோகரன் பிரதீப், றஹாம நிறுவன செயலாளர்நாயகம் திரு.மரிக்கார்,மன்னார் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரொகான் பொறியியளாலர் விமலேஸ்வரன் சமூர்த்தி அதிகாரிகள் கிராம சேவகர்கள் மற்றும் மலசல கூட பயனாலிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இவ் செயற்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட மலசல கூடங்களுக்கு சரீர உதவிகளை வழங்கிய பயனானாளர் குடும்பத்தினருக்கு ஊக்கத் தொகையாக பண உதவியும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது
மன்னாரில் மலசல கூட தொகுதி பயனாளிகளிடம் கையளிப்பு
Reviewed by Author
on
October 29, 2021
Rating:

No comments:
Post a Comment