கிதுல்கோட்டை கிராம மக்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு நீர் கட்டணங்கள்!
இந்த நீர் கட்டணத்தைப் பெறுவதற்கு முன்பு ஒரு மாதத்துக்கு ஐநூறு ரூபா அல்லது ஆயிரம் ரூபா தண்ணீர் கட்டணப் பட்டியல்களைப் பெற்றதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டணங்களை செலுத்தாவிட்டால் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் கூறியதுடன் அப்பகுதியில் கட்டணத்தைச் செலுத்தாத ஏராளமா னோருக்கு ஏற்கனவே நீர் விநியோகம் நிறுத்தப் பட்டுள்ளது.
தாம் இத்தகைய கட்டணப் பட்டியல்களை 2017 முதல் பெற்று வருவதாகவும் ஏற்கனவே அவற்றுக்கு வட்டி சேர்ந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.
நாளாந்த கூலித் தொழில் மற்றும் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தும் இந்த ஏழை மக்களுக்கு விரைவான தீர்வை அதிகாரிகள் வழங்குமாறு வேண்டுகோள் விடுக் கின்றனர்.
கிதுல்கோட்டை கிராம மக்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு நீர் கட்டணங்கள்!
Reviewed by Author
on
October 11, 2021
Rating:

No comments:
Post a Comment