அம்பாறையில் இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி
53 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, இந்த பயிற்சியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தளையை வந்தடைந்த இந்திய இராணுவத்தினர், அங்கிருந்து அம்பாறை போர்ப் பயிற்சி பாடசாலைக்கு சென்றதுடன், இராணுவ பயிற்சியின் பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டனர்.
இலங்கை இராணுவத்தின் விஜயபாஹூ படையணியுடன் அம்பாறை போர்ப்பயிற்சி பாடசாலையில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, COVID ஒழிப்பு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, Bio-Bubble முறைமையில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பயிற்சியின் போது கலகத்தடுப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இருதரப்பு அனுபவங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளதுடன், உள்ளக செயற்பாடுகளும் மேம்படுத்தப்படவுள்ளன
அம்பாறையில் இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி
Reviewed by Author
on
October 04, 2021
Rating:

No comments:
Post a Comment