யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு!
அது தொடர்பில் இரத்த வங்கி குறிப்பிட்டு உள்ளதாவது,
ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள இரத்த வங்கிக்குச் சென்று இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Covid - 19 தடுப்பூசி போட்டிருந்தால், போட்ட தினத்திலிருந்து ஒரு கிழமையின் பின்பு இரத்ததானம் செய்யலாம்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அது சுகமடைந்து தொற்று இல்லையென உறுதிப்படுத்திய தினத்திலிருந்து ஒரு மாதத்தின் பின்பு நீங்கள் இரத்ததானம் செய்யலாம்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இரத்ததான முகாம்களையும் நடாத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது
.
.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு!
Reviewed by Author
on
October 30, 2021
Rating:

No comments:
Post a Comment