மன்னார் மடு சின்ன வலயன்கட்டு பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த மருத்துவ முகாமில் இரணை இலுப்பகுளம்,பரசங்குளம், சின்ன வலயன்கட்டு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைத்திய சாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த இப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதனின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி மருத்துவ முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
இம் முகாமில் பிராந்திய சுகாதார பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர்ஒஸ்மன் டெனி மற்றும் பிராந்திய சுகாத சேவைகள் பணிமனையின் சுகாதார பணி உதவியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துவ உதவிகளை வழங்கினர்
மேற்படி மருத்துவ முகாம் மடு பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தொடர்சியாக நடாத்துவதற்கு மெசிடோ நிறுவனத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
.
.
மன்னார் மடு சின்ன வலயன்கட்டு பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்.
Reviewed by Author
on
November 07, 2021
Rating:
No comments:
Post a Comment