அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தற்போது வரை 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ள தாக மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின் குமார் தெரிவித்தார்

 தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 5555 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2400 ஏக்கர், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4345 ஏக்கர் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் 825 ஏக்கர் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 4042 ஏக்கர் நெற் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை 17,167 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

               





மன்னாரில் தற்போது வரை 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக பாதிப்பு. Reviewed by Author on November 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.