யாழில் ஹெரோயின் போதை மாத்திரை, கஞ்சா, வாளுடன் முக்கிய நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு
கைது செய்யப்பட்டவரகளிடம் இருந்து 52 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1562 போதை மாத்திரைகளும் 2.5 கிராம் ஹெரோயின், 200 கிராம் கஞ்சா, ஒரு கூரிய வாள் உட்பட போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு கார்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
யாழில் காரில் வைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குறித்த பொலிஸ் குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ். இராசா வின் தோட்டம் வீதியில் வைத்து குறித்த கார் சுற்றி வளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டதில் 2.5 கிராம் கெரோயின்,200 கிராம் கஞ்சா 2 பெட்டி போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டதுடன் முக்கிய சந்தேக நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவரில் பிரதான சந்தேகநபர் யாழ் நகரப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யாஸ் குழு எனும் புதிய வாள் வெட்டுக் குழுவின் தலைவராவார்.
அவரிடம் இருந்து கூரிய வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதேவேளை அவரிடம் நடாத்திய விசாரணையில் தனக்கு போதை மாத்திரைகளை வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரே தருவதாகவும் குறித்த நபர் வடமாகாணம் முழுவதும் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் பிரதான தரகர் எனவும் குறித்த நபர் தற்போது யாழ்ப்பா ணத்தில் இருப்பதாகவும் சந்தேக நபர் தெரிவித்த தையடுத்து அந்நபரை யாழ். கோவில் வீதியில் வைத்து மேனன் தலைமையிலான குழுவினர் சுற்றி வளைத்தனர்.
இதன்போது அவர் பயணித்த காரில் 50 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1550 போதை மாத்திரைகள் , கார் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இம்மாத்திரைகளை யாழில் விநியோகிப்பதற்காக குறித்த நபர் யாழ்ப்பாணம் வருகை தந்தமை விசாரணைகளில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர் வவுனியா நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய குறித்த மாத்திரைகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
யாழில் ஹெரோயின் போதை மாத்திரை, கஞ்சா, வாளுடன் முக்கிய நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு
Reviewed by Author
on
November 06, 2021
Rating:
No comments:
Post a Comment