அண்மைய செய்திகள்

recent
-

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாது - இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள்


யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டதன் பின்னர் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என சில நபர்கள் வெளியிடும் கருத்துகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை மின்சார சபையின் செயலாளரான அஜித் தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மின் உற்பத்தித் துறையில் அமெரிக்க நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்கைப் பெறும் அதே நேரத்தில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

 அத்தகைய நிறுவனங்கள் தெரிவிக்கப்பட்ட விலையில் மின்சாரம் வழங்குவதில் வாக்குறுதிகளைப் பின்பற்றாது என்றும் அவர் தெரிவித்தார். முக்கியமான மின் உற்பத்தி வளமானது அரசாங்கத்தால் மாத்திரமே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்க நிறுவனத்துக்கு நாளாந்த கொடுப்பனவு மற்றும் கட்டணங்கள் அமெரிக்க டொலரில் செலுத்தப்பட வேண்டும். அத்தகைய செலவு மின்சாரக் கட்டணத்தை மாத்திரமே அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாது - இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் Reviewed by Author on November 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.